செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

நரசிங்க லேகியம்.


  • தண்ணீர்விட்டான் கிழங்கு 350 gm ,
  • எள்ளு 700 gm,
  • நெருஞ்சி முள்ளு 700 gm,
  • சீந்தில் உப்பு 700 gm,
  • பால்மொதுக்கன் கிழங்கு 20 gm,
  • மத்தன் விதை 1/2 படி ,
  • சிவப்பு கொடிவேலி வேர் பட்டை 350 gm,
  • சுத்தி செய்த சேங்கொட்டை 1120 gm,
  • சுக்கு 280 gm,
  • மிளகு 280 gm,
  • திப்பிலி 280 gm,
இந்த சரக்குகளை முறைப்படி சூரணம் செய்து சீனி 2450 gm, தேன் 1225 gm,பசும் நெய் 620 gm, விட்டு நன்றாக அரைத்து அதன் பின்பு 
  • சாதிக்காய் 140 gm ,
  • சாதி பத்திரி 140 gm ,
  • மொட்டு நீக்கிய கிராம்பு 140 gm,
  • அதிமதுரம் 140 gm,
  • பீதரோகிணி 140 gm,
  • ஏலஅரிசி,140 gm,
இவைகளை தனி தனியே சூரணித்து முன் முடித்த லேகியத்தில் தூவி ஒரு துடுப்பால் கிளரியெடுத்து ஒரு மாதம் நெல்லுக்குள் வைத்து பின்பு எடுத்து உபயோகப்படுத்தவும்.

சாப்பிடும் முறை:
சுண்டைக்காய் அளவு எடுத்து காலை,மாலை, இரு நேரம் 30 நாட்கள் சாப்பிடவும்.


தீரும் நோய்கள் :

  • நரை திரை போகும்,
  • வாத பித்த கப நோய்கள் குணமாகும்.
  • தேகத்தை வஜ்ர காயமாகும்,
  • இதை கல்பமாக சாப்பிட 200 வருடம் வாழலாம்.(பெண் போகம் நீக்கி இருந்தால்).
  • தாதுவை கட்டி போகத்தை வெகு நேரம் நீடிக்க செய்யும்.
  • 18 வகை வித குஷ்ட ரோகங்களும் ,
  • வெண் குட்ட ரோகமும்,
  • புண் புரை,
  • கிரந்தி ரோகம்,
  • சயம்,
  • இருமல்,
  • விக்கல்,
  • வாந்தி,
  • நாக்கில் வரும் நோய்கள்,
  • பல் சம்பந்த நோய்கள்,
  • பல் அசைவு,
  • பல் சொத்தை,
  • பல் வலிகுத்தல்,
  • பீனிசங்கள்,
  • நாற்றம்,
  • சிர ரோகம்,
  • கண் நோய்கள்,
  • பவுத்திரம்,
  • ஆறு வகை மூல நோய்கள்,
  • நீராம்பல்,
  • கவுசி,
  • காந்தல்,
  • ஜல மகோதரம்,
  • ஜன்னி ,
  • பீடை ,
  • தோஷங்கள்,
  • நீரிழிவு,
  • மேக வாய்வு,
  • புத்தியை மயக்கும் பித்த ரோகம் தீரும் .
  • புத்திக்கு  தெளிவு தரும். 

குறிப்பு :
  1. இல்லறத்தில் இருக்கும் கணவன்,மனைவி ,இருவரும் லேகியத்தை சாப்பிட வேண்டும்.(ஒருவர் மட்டும் தனித்து சாப்பிட தீங்கை விளைவிக்கும்.).
  2. பெண் மலடுக்கு இந்த லேகியத்தை கொடுத்தால் மலடு நீங்கி அழகான குழந்தைகளை பெற்றெடுப்பார்கள்,குழந்தை மன்மதன் போல் கலையுள்ளவனாகவும்,பராக்கிரமசாலியாகவும்,அறிவோடு கூடியவனாகவும் அவதரிப்பான்.
  3. இந்த லேகியத்திற்கு பத்தியம் இல்லை. 
  4. பிரமச்சாரிகளும் சாப்பிடலாம்.